மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.;

Update:2025-05-11 09:12 IST

கோப்புப்படம்

சேலம்,

மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது சேலம் மாவட்டத்தின் மேட்டூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, நீர் வரத்து விநாடிக்கு 876 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர் மட்டம் 108.19 அடியாகவும், நீர் இருப்பு 75.86 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்