வைகை அணையில் இன்று பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது.;

Update:2025-09-18 07:33 IST

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது. வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில வாரங்களாக 68 அடியை கடந்த நிலையில் நீடிக்கிறது.

இந்நிலையில் இன்று முதல் மதுரை, சிவகங்கை மாவட்டங்களின் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 68.80 அடியாக இருந்தது. நீர் வரத்து வினாடிக்கு 733 கன அடி. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 669 கன அடி நீர் வெளியேறுகிறது.

கால்வாய் வழியாக வினாடிக்கு 1130 கன அடி நீர் கூடுதலாக திறந்து விடப்படுவதால் பொதுமக்கள் கால்வாயில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்று நீர்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்