மதுரையின் வளர்ச்சிக்கு எதிராக போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெறிவோம் - மு.க.ஸ்டாலின்
மத்திய அரசு, மதுரையை வஞ்சிப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
மதுரை மற்றும் கோவை நகரங்களுக்கான மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதனை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
எய்ம்ஸ்-ம் வராது, மெட்ரோ ரெயிலையும் வரவிட மாட்டோம் என மதுரையை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கூடல்நகரில் கூடிய நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்... அனைத்து வழிகளிலும் போராட்டத்தை முன்னெடுத்து, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராகத் திகழும் மாமதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்!”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.