வள்ளுவப் பெருந்தகையின் புகழை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்: டிடிவி தினகரன்

வள்ளுவப் பெருந்தகையின் புகழை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.;

Update:2026-01-16 10:57 IST

சென்னை,

திருவள்ளுவர் தினத்தையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;-

மனிதகுலம் முழுமைக்குமான வாழ்வியலை வகுத்துக் கொடுத்திருக்கும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய வள்ளுவப்பெருந்தகையை போற்றிக் கொண்டாடும் திருவள்ளுவர் தினம் இன்று. சாதி, மதம், இனம் கடந்து உலகப் பேரறிஞர்கள் பலரும் உவந்து போற்றிடும் இந்திய நாட்டின் ஈடு இணையற்ற தேசிய இலக்கியமாக திகழும் திருக்குறளை படைத்திட்ட வள்ளுவப் பெருந்தகையின் புகழை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது,.

Tags:    

மேலும் செய்திகள்