சபாஷ்.. சரியான போட்டி.. - அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார்.;
சென்னை,
தமிழக சட்டசபையில் இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது, "தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" என்று குற்றம்சாட்டினார்.
அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், "ராமாயணத்திலேயே பெண்ணை தூக்கிச் சென்றுவிட்டனர், எல்லா இடத்திலும் நல்லவர்கள் இருக்க முடியாது" என்று பதில் அளித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதாஜீவன், "பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது" என்று தெரிவித்தார்.
பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில் அளித்ததை பார்த்து அமைச்சர் துரைமுருகன், "சபாஷ்.. சரியான போட்டி.." என்றார். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது.