தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு: பிரவீன் சக்கரவர்த்தி அதிரடி பதிவு

தவெக - காங்கிரஸ் கூட்டணி தேவையென ஒரு தரப்பினர் கோரிவரும் நிலையில் பிரவீனின் பதிவு கவனம் பெற்றுள்ளது.;

Update:2026-01-22 15:59 IST

சென்னை,

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருந்து வருகின்றது. என்றாலும், தவெக தலைவர் விஜய்யுடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போன் மூலமும், முக்கிய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரிலும் சந்தித்து பேசியதால், காங்கிரஸ் கட்சி கூட்டணியை மாற்றுகிறதோ என்ற கேள்வி எழுந்தது.

காரணம், தவெகவுடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்குதரப்படும் என்று ஏற்கனவே விஜய் அறிவித்து இருந்தார். காங்கிரஸ் கட்சியும் தற்போது ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கோஷத்தை முன்வைத்து வருவதால், விஜய்யுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அதை மறுத்துவிட்டது. இந்த நிலையில், சமீபத்தில் கோவை வந்த பிரவீன் சக்கரவர்த்தி, விஜய் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்து இருக்கிறார் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

இன்று தவெகவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ள நிலையில், அது தொடர்பாகவும் பரபரப்பு பதிவு ஒன்றை பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ளார். அதாவது, "2026 தேர்தலுக்கான விசில் ஊதப்பட்டுவிட்டது" அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி புறப்பட ஆயத்தமாகிவிட்டன. என்று கூறியுள்ளார். இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

தவெக - காங்கிரஸ் கூட்டணி தேவையென ஒரு தரப்பினர் கோரிவரும் நிலையில் பிரவீனின் பதிவு கவனம் பெற்றுள்ளது. தேர்தல் தொடர்பாக முடிவுகளை டெல்லி மேலிடமே எடுக்கும் என அறிவித்த நிலையில் பிரவீன் சக்ரவர்த்தி பதிவிட்டுள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்