கண்ணமங்கலம் ஏரியில் கண்ணாடி பாலம், ரோப் கார் அமைக்கப்படுமா? - அமைச்சர் ராஜேந்திரன் பதில்
கண்ணமங்கலம் ஏரியில் கண்ணாடி பாலம், ரோப் கார் அமைக்கப்படுமா என்று எம்.எல்.ஏ பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.;
கோப்புப்படம்
தமிழக சட்டசபையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் கண்ணமங்கலம் பகுதியில் 150 எக்கர் ஏரி உள்ளது. அதில் படகு குளம் அமைக்கப்படுமா? பீகாரில் ராஜ்கீர் என்ற இடத்தில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். அது போல கண்ணமங்கலத்தில் கண்ணாடி பாலம் மற்றும் ரோப் கார் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிதி பங்களிப்பு இல்லாமால் இருப்பதால் தனியார் பங்களிப்பு உதவியுடன் ரோப் கார் அமைப்படுமா? என்று சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திரன், கண்ணமங்கலம் பகுதியில் கண்ணாடி பாலம் மற்றும் ரோப் கார் அமைக்க நிதிநிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.