தூத்துக்குடியில் பெண் பாலியல் பலாத்காரம்: மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரத்தில் விவசாய வேலைக்கு சென்று வந்த 45 வயது பெண்ணை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.;

Update:2025-11-06 01:45 IST

தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரத்தில் விவசாய வேலைக்கு சென்று வந்த 45 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முருகன் என்பவரை அக்கம்பக்கத்தில் வேலைசெய்து கொண்டிருந்தவர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்தும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கவும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு முழுமையான மருத்துவ ஆலோசனை வழங்கவும் குற்றவாளிக்கு ஜாமீனில் வெளிவராதபடி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தெய்வச்செயல்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின்போது மாதர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் பூமயில், மாவட்ட துணை செயலாளர் இனிதா ஆகியோர் பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து கண்டித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் பெருமாள், முருகன், சின்னத்தம்பி மற்றும் ஊர்ப் பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்