ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், வாலிபரிடம் விசாரித்து வருகின்றனர்.;

Update:2025-07-15 07:52 IST

கோவை,

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் தனது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கரூர் மாவட்டம் பூவராயம்பட்டி பகுதியை சேர்ந்த அஜய் (22) என்பவர் வேலை தேடி கோவை வந்தார். இவருக்கும் சிறுமியின் குடும்பத்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அஜய், சிறுமியை ஆசை வார்த்தை கூறி மயக்கினார்.

இந்த நிலையில் அருகில் உள்ள அஜய்யின் அறைக்கு சிறுமி அடிக்கடி சென்று வந்தார். அங்கு சிறுமியை அஜய் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கிடையே, அஜய் சிறுமியுடன் வெளியூர் சென்று விட்டார். இதுகுறித்து சிறுமியின் தாய் பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் சிக்னலை பார்த்து, வெளியூரில் சிறுமியுடன் இருந்த அஜய்யை பிடித்து வந்து போக்சோவில் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்