சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபர் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டீக்கடைக்காரரை போலீசார் கைதுசெய்தனர்.;

Update:2025-02-24 06:36 IST

திருச்சி,

திருச்சி மாவட்டம் பாலகிருஷ்ணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 33). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஆண் குழந்தை உள்ளனர். இவர் உப்பிலியபுரம் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர், 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags:    

மேலும் செய்திகள்