இளம்பெண், குளிப்பதை செல்போனில் வீடியோ எடுப்பத வாலிபர் கைது

அதே பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம்(வயது 43) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.;

Update:2025-10-12 01:30 IST

சென்னை,

சென்னையை அடுத்த புழல் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், தனது வீட்டின் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர், அவர் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுப்பதை கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டார். இதனால் பயந்துபோன அந்த ஆசாமி தப்பி ஓடினார். இளம்பெண்ணின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர்

அந்த ஆசாமியை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்த புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து அதே பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம்(வயது 43) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்