குழந்தை இல்லாத விரக்தியில் பிளேடால் வயிற்றில் அறுத்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

குழந்தை இல்லாததால் விரக்தி அடைந்த இளைஞர் பிளேடால் தனது வயிற்றை கிழித்துக்கொண்டார்.;

Update:2025-04-14 14:23 IST

கோப்புப்படம்

சென்னை பெரம்பூர் அகரம் பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் கதிர் என்ற கதிர்வேல் (29 வயது). இவர், செம்பியம் போலீஸ் நிலையத்தில் பழைய குற்றவாளி ஆவார். இவர், 5 ஆண்டுகளுக்கு முன்பு கலையரசி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன்-மனைவி இருவரும் கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

குழந்தை இல்லாததால் விரக்தி அடைந்த கதிர்வேல், நேற்று குடிபோதையில் வீட்டில் இருந்த பிளேடால் தனது வயிற்றை கிழித்துக்கொண்டார். இதில் காயம் அடைந்த அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்