காதலுக்கு உதவி கேட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.;

Update:2025-10-12 04:35 IST

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவை சேர்ந்த 16 வயது சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி திருவாலங்காடு ஒன்றியம் கொல்லகுப்பம் கிராமத்தை சேர்ந்த தேவா என்கின்ற தேவராஜ் (வயது 24) என்பவரிடம் தனது காதலுக்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். இந்த சர்ந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட தேவா, சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் அனைத் து மகளிர் காவல் நிலைய போலீசார் தேவாவை போக்சோ வழக்கில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்