பஸ் நிலையத்தில் மதுபோதையில் கிடந்த இளம்பெண்ணால் பரபரப்பு

ஈரோடு பஸ் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் மதுபோதையில் விழுந்து கிடந்தார்.;

Update:2025-08-24 02:03 IST

ஈரோடு,

ஈரோடு பஸ் நிலையத்தில் 24 மணி நேரமும் பயணிகள் கூட்டம் காணப்படும். எப்போதும் பரபரப்பாக இருக்கும் இங்கு, மதுபிரியர்களின் அட்டகாசத்துக்கு அளவே கிடையாது. ஆங்காங்கே மதுபோதையில் விழுந்து கிடப்பது, மினி பஸ் நிறுத்துமிடத்தில் உள்ள பயணிகள் இருக்கையில் தூங்குவது தொடர் கதையாகி வருகிறது. போலீசார் ரோந்து செல்லும்போது விரட்டி அடித்தாலும் அவர்கள் மீண்டும் அங்கேயே வந்து தஞ்சமடைகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு கோவை பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடையில் இளம்பெண் ஒருவர் மதுபோதையில் விழுந்து கிடந்தார். சுயநினைவின்றி இருந்த அவரை அங்கிருந்தவர்கள் எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் எழுந்திருக்க முடியாமல், தனது முகத்தை துப்பட்டாவால் மூடிக்கொண்டார். பெண் ஒருவர் மதுபோதையில் விழுந்து கிடந்தது அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்தது. இதுகுறித்து கடைக்காரர்கள் கூறும்போது, ‘வெளியூருக்கு செல்பவர்களில் சிலர் மது குடித்துவிட்டு வருகின்றனர். இதில் போதை அதிகமாகிவிட்டால் எந்த பஸ்களில் ஏறுவது என்றே தெரியாமல் ஆங்காங்கே விழுந்து கிடக்கின்றனர். பெண்களும் மதுபோதையில் வருகிறார்கள். இவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்த முடியாமல் போலீசாரும் சிரமப்படுகின்றனர்’ என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்