மெக்கானிக்குடன் கள்ளக்காதல்; கணவருடன் செல்ல மறுத்த இளம்பெண் - காவல் நிலையத்தில் பரபரப்பு சம்பவம்
காவல் நிலையத்தில் கணவரை கண்டுகொள்ளாத அந்த இளம்பெண் கள்ளக்காதலனுடன் செல்வதையே உறுதியாக இருந்துள்ளார்.;
சேலம்,
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 29)கட்டிட தொழிலாளி, இவரது மனைவி சுசீலா (வயது 24) இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்தநிலையில் சுசீலாவுக்கு அதே பகுதியில் வசிக்கும் இருசக்கர வாகன மெக்கானிக்கான ஹரிகரன் (வயது 26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பகலில் கணவர் கட்டிட வேலைக்கு சென்றுவிட்டதால் தனிமையில் இருந்த சுசீலா மெக்கானிக்கை வீட்டிற்கு வரவழைத்து அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து வெளியேறிய அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கழுத்தில் புது தாலியுடன் அவர்கள் சூரமங்கலம் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராணி மற்றும் போலீசார் அவர்களிடம் தீவிரமாக விசாரித்தனர். மேலும் கணவர் பாலமுருகனையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்தனர். அப்போது மனைவி கழுத்தில் வேறு ஒரு தாலியுடன் கள்ளக்காதலனுடன் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அந்த தாலியை கழற்றி வைத்து விட்டு தன்னுடன் வருமாறு பாலமுருகன் கெஞ்சினார். ஆனால் அதனை கண்டுகொள்ளாத அந்த இளம்பெண் கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் என்று கூறியதுடன் அந்த தாலியை கழற்ற மறுத்து விட்டார்.
இதற்கிடையே குழந்தைகளை பார்த்தால் மனம் மாறிவிடுவார் என்று நினைத்த உறவினர்கள் 2 குழந்தைகளையும் அங்கு அழைத்து வந்தனர். குழந்தைகளை பார்த்ததும் அந்த பெண் கதறி அழுதார். இதனை பார்த்த அந்த குழந்தைகளும் அம்மா...அம்மா என்று கதறி அழுதது. ஆனாலும் அவர் மனம்மாறவில்லை. இதற்கிடையே ஹரிஹரனின் பெற்றோரை வரவழைத்த போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அழைத்துசெல்லுமாறு கூறினர்.
மேலும் போலீசாரும் திருமணம் ஆகாத நீ 2 குழந்தைகளின் தாயை திருமணம் செய்து கொண்டு எத்தனை நாள் குடும்பம் நடத்துவாய், அடுத்த குடும்பத்தை அழித்து விடாதே என்று அறிவுரை கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட கள்ளக்காதலன் பெற்றோருடன் புறப்பட்டு சென்றுவிட்டார். ஆனாலும் எனக்கு கள்ளக்காதலன் தான் வேண்டும் என்று அந்த பெண் பிடிவாதமாக இருந்தார். அவர் கணவரோ, என்னோடு மனைவியை அனுப்பி வையுங்கள், குழந்தைகளுக்காக மனைவி வேண்டும் என்றார். இதனை கண்டுக்கொள்ளாத அந்த பெண் காதலனுடன் சேர்ந்து வாழ்வதிலேயே குறிக்கோளாக இருந்தார்.
இதனையடுத்து அந்த பெண்ணை காப்பகத்திற்கு அனுப்பி வைத்த போலீசார் 2 நாட்கள் அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே ஹரிஹரனின் தாய் திருமணமாகத எனது மகனை திருமணமாகி 2 குழந்தைகளின் தாயான சுசீலா கடத்தி சென்றுவிட்டார் என்று புகார் கொடுத்து உள்ளார். இதனையடுத்து 2 பேரிடமும் இன்றும் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். முடிவில் ஹரிஹரன் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.