ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் கல்லால் அடித்துக் கொலை - காதலன் தலைமறைவு

ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-04-02 17:08 IST

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கொளத்தூரை சேர்ந்தவர் இளம்பெண் விக்னேஸ்வரி. இவரும், புதுக்கோட்டையை சேர்ந்த தீபன் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று இரவு விக்னேஸ்வரியை இருசக்கர வாகனத்தில் தீபன் அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் வெகு நேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர் இருவரையும் தேடியுள்ளனர். அப்போது கொளத்தூர் சுடுகாடு நுழைவாயில் அருகே விக்னேஸ்வரியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் விக்னேஷ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இளம்பெண் விக்னேஸ்வரி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்னேஸ்வரி ஆணவக் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் தலைமறைவான காதலன் தீபனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்