சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது

24 திருட்டு செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.;

Update:2025-06-20 21:37 IST

சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் பயணிகளின் செல்போன்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. திருட்டில் ஈடுபடும் திருடர்களை கைது செய்ய ரெயில்வே போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், புறநகர் மின்சார ரெயில்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளின் செல்போன்களை திருடிய வெங்கடேஷ் என்பவரை ரெயில்வே போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் ஆந்திராவை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும், அவரிடமிருந்து 24 திருட்டு செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்