திருநெல்வேலியில் ஜேசிபி வாகனத்தை திருடிய வாலிபர் கைது

கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவன மேலாளர், தனது நிறுவனத்துக்கு சொந்தமான ஜேசிபி வாகனத்தை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.;

Update:2025-11-16 20:25 IST

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் சங்கர்நகரை சேர்ந்த செந்தில்வேல் (வயது 45) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு சொந்தமான ஜேசிபி வாகனத்தை 13.11.2025 அன்று காலை, செந்தில்வேல் கம்பெனியில் வந்து பார்த்த போது காணவில்லை.

இதுகுறித்து செந்தில்வேல் கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை சேர்ந்த கருப்பசாமி மகன் ஈஸ்வரன்(32) என்பவர் ஜேசிபி வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. மேற்சொன்ன போலீஸ் இன்ஸ்பெக்டர், ஈஸ்வரனை இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் அவரிடமிருந்து ஜேசிபி வாகனத்தை கைப்பற்றி உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்