நெல்லையில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
திருக்குறுங்குடி பகுதியில் தினேஷ் தனது வீட்டின் முன்பு இரவில் நிறுத்திய மோட்டார் சைக்கிளை காலையில் சென்று பார்த்தபோது காணவில்லை.;
நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி, வடக்கு ரதவீதியைச் சேர்ந்த தினேஷ் 1.5.2025 அன்று தனது வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, இரவில் தூங்கிவிட்டு மறுநாள் காலை வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து தினேஷ் திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் உத்தமபாண்டியபுரம், வடக்கு தெருவைச் சேர்ந்த சூர்யா (வயது 20) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் சூர்யாவை நேற்று (3.5.2025) கைது செய்து நடவடிக்கை எடுத்தார்.