தூத்துக்குடியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சிவகாசியில் உள்ள பேப்பர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அவர் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.;
தூத்துக்குடி முத்தையாபுரம், ராஜீவ்நகர் 1வது தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மகன் நட்டார் விக்னேஷ் (வயது 19), சிவகாசியில் உள்ள பேப்பர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அவர் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். நேற்று இரவு அவரது அம்மா பத்மா வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு வந்து பார்க்கும்போது, வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது.
ஜன்னல் வழியாக பார்த்தபோது நட்டார் விக்னேஷ் மின்விசிறியில் சேலையால் தூக்குமாட்டி இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நட்டார் விக்னேஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.