தென்காசியில் இளைஞர் குத்திக்கொலை - அதிர்ச்சி சம்பவம்

முதற்கட்ட விசாரணையில் முஸ்ம்மிலை அவரது நணர்களே குதித்துக்கொன்றது தெரியவந்துள்ளது.;

Update:2025-11-21 18:15 IST

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் திவான் மைதீன். இவரது மகன் முஸம்மில் (வயது 22). இந்நிலையில், இளைஞர் முஸம்மில் இன்று குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், முஸம்மில்லின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இளைஞர் முஸ்ம்மிலை அவரது நணர்களே கத்தியால் குதித்துக்கொன்றது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தலைமறைவாக உள்ள முஸ்ம்மிலின் நண்பர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்