திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update:2025-08-23 23:27 IST

பெங்களூரு,

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா குறிமண்டி கிராமத்தை சேர்ந்தவர் கிரீஷ் (வயது 24). அதேப்பகுதியில் இவரது உறவினரான 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமிக்கும், கிரீசுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறி இருவரும் காதலித்து வந்துள்ளனர். மேலும் 2 பேரும் பல இடங்களில் ஜோடியாக சுற்றி வந்துள்ளனர்.

இந்த நிலையில் கிரீஷ், சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் சொல்ல வேண்டாம் எனவும் கிரீஷ் தெரிவித்துள்ளார். இதனால் சிறுமி வெளியே யாரிடமும் சொல்லவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர், அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ந்து போன அவர்கள், இதுபற்றி சிறுமியிடம் கேட்டுள்ளனர்.

அப்போது சிறுமி நடந்த விவரங்களை பெற்றோரிடம் கூறி உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் குண்டலுபேட்டை போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையே கிரீஷ் தலைமறைவாகி விட்டார். இதுதொடர்பாக குண்டலுபேட்டை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிரீசை வலைவீசி தேடி வருகிறார்கள்.

 

Tags:    

மேலும் செய்திகள்