வீடுகளுக்கு தினமும் 3 மணி நேரம் இலவச மின்சாரம் - ஆஸ்திரேலியா திட்டம்

ஜூலை 2026 க்குள் சோலார் ஷேரர் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.;

Update:2025-11-04 20:09 IST

பெர்த்,

வீடுகளுக்கு தினமும் 3 மணி நேரம் இலவச மின்சார வழங்கும் சோலார் ஷேரர் திட்டத்தை ஆஸ்திரேலியா அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

ஆஸ்திரேலியாவில் 2026 -ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் எரிசக்தி சேமிப்பு திட்டத்தின் கீழ், சூரிய மின்சக்தி பேனல்கள் இல்லாத வீடுகள் உள்பட, அனைத்து வீடுகளுக்கும் தினமும் குறைந்தது மூன்று மணி நேரம் இலவச சூரிய மின்சாரம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக அந்நாட்டின் எரிசக்தித்துறை மந்திரி கிறிஸ் போவன் கூறியுள்ளார்.

ஜூலை 2026 க்குள் சோலார் ஷேரர் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட நான்கு மில்லியன் வீடுகளின் கூரையில் சூரியசக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. உச்சப் பகல் வேளைகளில் மின்சாரச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும் அளவுக்கு அவற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தியாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்