ஆஸ்திரேலியாவில் பிற்பகலில் மர்ம நபர் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி

பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என போலீசார் கேட்டு கொண்டனர்.;

Update:2026-01-22 14:54 IST

நியூ சவுத் வேல்ஸ்,

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் லேக் கார்ஜெல்லிகோ நகரில் மர்ம நபர் ஒருவர் பெரிய துப்பாக்கியை வைத்து கொண்டு இன்று பிற்பகலில் சுற்றி திரிந்துள்ளார்.

அப்போது அந்நபர், எதிரில் வந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியுள்ளார். இந்த சம்பவத்தில், 2 பெண்கள், ஆண் ஒருவர் என மொத்தம் 3 பேர் பலியானார்கள். ஒருவர் காயத்துடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.

இதுதொடர்பான தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டு கொண்டனர். இந்த பகுதியை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தினர். மர்ம நபரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்