மருத்துவ கிளினிக்கில் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி

இந்த குண்டு வெடிப்பில் 5 பேர் படுகாயமடைந்தனர்.;

Update:2025-05-18 07:57 IST

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பிலேம் ஸ்பிரிங்ஸ் பகுதியில் டாக்டர் மகிர் அப்துலா என்பவர் மகப்பேறு மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், அந்த கிளினிக்கில் நேற்று காலை 11 மணிக்கு குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் கிளினிக்கில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கிளினிக்கில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த குண்டுவெடிப்பு பயங்கரவாத சம்பவம் என்று எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்