வங்காளதேசத்தில் பிப்ரவரி 12-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் - அறிவிப்பு வெளியீடு
வங்காளதேசத்தில் தற்போது இடைக்கால அரசு பதவியில் உள்ளது.;
டாக்கா,
வங்காளதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அங்கு தற்போது இடைக்கால அரசு பதவியில் உள்ளது.
இந்நிலையில், வங்காளதேச நாடாளுமன்ற தேர்தல், அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் நசிர் உத்தின் அறிவித்துள்ளார். ஷேக் ஹசீனா வெளியேற்றத்துக்கு பிறகு நடக்கும் முதலாவது தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.