பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன;

Update:2025-06-14 20:56 IST

லாகூர்,

பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 6.53 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானது. அந்நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் குவாடர் மாவட்டம் பாஸ்னி நகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர். அதேவேளை, இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்