போராட்டக்காரர்கள் மீது சேற்றை வாரி இறைத்த டிரம்ப் - சமூக வலைத்தளத்தில் ஏ.ஐ. வீடியோ வைரல்
சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக கூறி அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக 70 லட்சம் மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
வாஷிங்டன்,
டிரம்ப் அரசின் நிர்வாகம் மற்றும் கொள்கைகளை கண்டித்து அவருக்கு எதிரான போராட்டம் அமெரிக்காவில் நேற்று தீ விரம் அடைந்தது. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் மக்கள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உட்டா நகரில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.
இந்தநிலையில், சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக கூறி அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக 70 லட்சம் மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு, “நான் ஒன்றும் மன்னன் இல்லை, ஜனநாயக கட்சியின் தவறுகளை சரி செய்கிறேன்” என அவர் பதிலளித்தார்.
அமெரிக்காவில் போராட்டக்காரர்கள் மீது போர் விமானத்தில் இருந்து கழிவுகள் மற்றும் சேற்றை வாரி இறைத்து அவமானப்படுத்துவது போன்ற டிரம்ப் ஏ.ஐ. வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
டுரூத் சமூக வலைத்தள பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், மன்னர் டிரம்ப் என்று குறிப்பிடப்பட்டுள்ள போர் விமானத்தில் விமானியாக கிரீடம் அணிந்து உட்கார்ந்து இருக்கும் டிரம்ப், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது சேற்றை வாரி இறைத்தார். அப்போது பின்னணியில் பிரபல ஹாலிவுட் பட பாடல் ஒலிக்கிறது.