வங்காள தேசத்தில் இந்து மாணவர் மர்ம சாவு
கல்லூரி மானவரான இவர் கடந்த 11-ம் தேதி மாயமானார்.;
டாக்கா,
வங்காள தெசத்தில் மாணவர் இயக்க தலைவர் கொல்லப்பட்டதையடுத்து வன்முறை வெடித்தது. அதன்பிறகு இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. 9 இந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், இந்து மாணவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். போகுரா மாவட்டம் சந்தாஹார் பகுதியை சேர்ந்தவர் அபி. கல்லூரி மானவரான இவர் கடந்த 11-ம் தேதி மாயமானார். இந்தநிலையில், நவுகான் நகரில் ஆற்றில் உயிரிழந்த நிலையில், அபியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.