ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது;

Update:2025-12-12 09:56 IST

டோக்கியோ,

ஜப்பானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஹொன்சு தீவில் உள்ள குஜி நகரில் இருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

முன்னதாக, ஜப்பானில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்