பிரதமர் மோடிக்கு டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

140 கோடி இந்தியர்களின் சார்பாக இந்த விருதை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;

Update:2025-07-04 20:53 IST

போர்ட் ஆப் ஸ்பெயின்,

பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று கானாவுக்கு சென்றார். அந்த பயணத்தை முடித்துக்கொண்டு இன்று கரீபியன் தீவு நாடான டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றார்.

அவர் அந்நாட்டு பிரதமர் கமலா பிரிசத் பிஸ்சரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டின் உயரிய விருதான தி ஆர்டர் ஆப் தி டிரினிடாட் அண்டு டொபாகோ குடியரசு விருது வழங்கப்பட்டது. 140 கோடி இந்தியர்களின்  சார்பாக இந்த விருதை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்