குரில் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவு

முன்னதாக நேற்று காலை 8 மணியளவில் ரிக்டர் 6.3 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.;

Update:2025-07-31 15:30 IST

குரில் தீவுகள்,

ரஷியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே குரில் தீவுகள் அமைந்துள்ளது. இந்த தீவின் கடல் பகுதியில் இன்று காலை 10.57 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

குரில் தீவுகளில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 49.51 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 158.75 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். முன்னதாக நேற்று காலை 8 மணியளவில் ரிக்டர் 6.3 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



Tags:    

மேலும் செய்திகள்