ரஷியாவில் வரலாறு காணாத பனிப்பொழிவு- இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ரஷியாவில் உயரமான கட்டிடங்களில் 4-வது மாடி வரை பனியால் சூழப்பட்டுள்ளது.;

Update:2026-01-20 21:03 IST

மாஸ்கோ.

ரஷியாவில் தற்போது பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த ஆண்டு அங்கு வரலாறு காணாத வகையில் பனி கொட்டி வருகிறது. 146 ஆண்டுகளில் இல்லாத அளவில் பனிப்பொழிவு ரஷியாவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் தலைநகர் மாஸ்கோ மற்றும் பல்வேறு நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ரஷியாவின் கம்சட்கா தீபகற்பம் பனிப்பொழி வால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு பனிக் குவியல்கள் 10 முதல் 40 அடி உயரம் வரை உயர்ந்துள்ளன. உயரமான கட்டிடங்களில் 4-வது மாடி வரை பனியால் சூழப்பட்டுள்ளது. அங்குள்ள கட்டிடங்கள் பனியால் மூடப்பட்டது போல் உள்ளன. கம்சட்கா தீபகற்பத்தில் மின்வெட்டு மற்றும் போக்குவரத்து துண்டிப்பு, விமானச் சேவைகள் ரத்து உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளன. கடும் பனிப்பொழிவால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு அவசரநிலைப்பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்