சல்மான்கானை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது பாகிஸ்தான்?

பலுச்சிஸ்தானை தனி நாடு போல் குறிப்பிட்டு நடிகர் சல்மான் கான் பேசினார். இதனை தொடர்ந்து பயங்கரவாதிகள் பட்டியலில் அவரை பாகிஸ்தான் சேர்த்ததாக கூறப்படுகிறது.;

Update:2025-10-26 19:10 IST

புதுடெல்லி,

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பலூசிஸ்தான் குறித்து பேசிய கருத்துகள் காரணமாக பாகிஸ்தானில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். இதன் விளைவாக, பாகிஸ்தான் அரசு அவரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரியாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சல்மான் கான் பேசியதாவது:

"நீங்கள் ஒரு இந்தித் திரைப்படம் எடுத்து இங்கு (சவுதி அரேபியா) வெளியிட்டால், அது ஒரு சூப்பர் ஹிட் ஆகும். தமிழ், தெலுங்கு அல்லது மலையாள திரைப்படத்தை உருவாக்கினால், அது பல நூறு கோடிகளை சம்பாதிக்கும். ஏனெனில் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்துள்ளனர். இங்கு பலூசிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.அனைவரும் இங்கு வேலை செய்கிறார்கள்," என்று சல்மான் கான் பேசியிருந்தார்.

சல்மான் கானின் இந்த பேச்சால் கோபம் அடைந்த பாகிஸ்தான், அவரை பயங்கரவாதிகள் பட்டியலின் 4-வது அட்டவணையில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. சமூக வலைத்தளங்களில் மட்டுமே இப்படியான ஒரு செய்தி பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்