பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு - 9 பயங்கரவாதிகள் உயிரிழப்பு
பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.;
Image Courtesy : AFP
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் வடகிழக்கு கைபர் பக்டுங்க்வா மாகாணத்தில் உள்ள பஜோர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக அந்நாட்டு உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு பாதுகாப்பு படை வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் ஏற்கனவே பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் எனவும், தொடர்ந்து அந்த பகுதியில் வேறு பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா என்பதை கண்டறிய தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாகவும் பாகிஸ்தான் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.