அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு: 4 பேர் பலி; 10 பேர் காயம்

எப்.பி.ஐ. அதிகாரிகள், மதுபானம், புகையிலை, துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுக்கான துறையை சேர்ந்தவர்கள் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update:2025-11-30 12:03 IST

ஸ்டாக்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஸ்டாக்டன் நகரில் லூசைல் அவென்யூ பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், குழந்தைகள், பெரியவர்கள் என பல்வேறு குடும்பத்தினரும் ஒன்றாக பங்கேற்றிருந்தனர். அப்போது, திடீரென துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதனால், பயத்தில் அலறியபடி பலரும் தப்பித்து ஓடினர்.

எனினும், இந்த சம்பவத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். 10 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் பலர் இளைஞர்கள் ஆவர். இந்த தாக்குதலுக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரிய வரவில்லை. ஆனால், இது திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரும் அடையாளம் காணப்படவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை.

எப்.பி.ஐ. அதிகாரிகள், மதுபானம், புகையிலை, துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுக்கான துறையை சேர்ந்தவர்கள் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் பற்றி கலிபோர்னியா கவர்னர் கேவின் நியூசோமுக்கு விரிவாக விளக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்