அமெரிக்கா: விமான நிலையத்திற்குள் புகுந்த சொகுசு கார் - 6 பேர் காயம்
கைது செய்யப்பட்ட கார் டிரைவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.;
வாஷிங்டன்,
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டெட்ராய்ட் நகரில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இன்று பயணிகள் விமானத்திற்கு காத்திருந்தனர்.
அப்போது விமான நிலையத்திற்கு வேகமாக வந்த சொகுசு கார் திடீரென விமான நிலைய டிக்கெட் கவுண்ட்டருக்குள் புகுந்தது. இந்த சம்பவத்தில் விமான நிலையத்தில் இருந்த 6 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்புப்பணியில் இருந்த போலீசார், காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட கார் டிரைவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.