செக் குடியரசு நாட்டில் ரெயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து - 57 பேர் படுகாயம்

விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.;

Update:2025-11-22 06:57 IST

பிராக்,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செக் குடியரசின் பிளென் நகரில் இருந்து பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டது. அந்த ரெயில் செஸ்கே புடெஜோவிஸ் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அதே வழித்தடத்தில் மற்றொரு ரெயிலும் சென்றது. இதனால் அந்த இரு ரெயில்களும் நேருக்குநேர் மோதின.

இந்த விபத்தில் 57 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு குழுவினர் விபத்துக்குள்ளான ரெயில் பெட்டிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக செஸ்கே புடெஜோவிஸ்- பிளென் ஆகிய நகரங்களுக்கு இடையே பல மணி நேரம் ரெயில் சேவை துண்டிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்