ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி - அமெரிக்கா ஒப்புதல்
சுகாதாரத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக ருவாண்டா அதிபர் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.;
வாஷிங்டன்,
கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் எய்ட்ஸ், மலேரியா உள்ளிட்ட பல தொற்றுநோய்கள் வேகமாக பரவுகின்றன. இதனை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாட்டின் சுகாதாரத்துறை போராடி வருகிறது. இந்த நிலையில் காங்கோ உடனான அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்காக ருவாண்டா அதிபர் பால் ககாமே அமெரிக்கா சென்றிருந்தார்.
பின்னர் ஜனாதிபதி டிரம்ப் முன்னிலையில் இரு நாடுகளின் தலைவர்களும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதனை தொடர்ந்து நாட்டின் சுகாதாரத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக ருவாண்டா அதிபர் பால் ககாமே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உலக சுகாதார திட்டத்தின்கீழ் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வழங்கும் ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.