விசா சேவை நிறுத்தம்: இந்தியா - வங்காளதேசம் தூதரக ரீதியான பதற்றம் அதிகரிப்பு
வங்காளதேசத்தில் இந்து இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.;
கோப்புப்படம்
டாக்கா,
வங்காளதேசத்தில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து போராட்டமும் வன்முறையும் வெடித்தன. இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் திபு சந்திர தாஸ் என்பவர் அங்கு அடித்து கொல்லப்பட்டார். தொடர்ந்து இந்து மதத்தை சேர்ந்த சிலர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்துக்கள் மீதான தாக்குலுக்கு இந்தியா உள்ளிட்ட உலகநாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த சூழலில் வங்கதேசத்தில் இந்து இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் அதற்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியான பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்திவைப்பதாக வங்காள தேச அரசு அறிவித்துள்ளது.
மேலும் டெல்லி, சென்னை, அகர்தலா உட்பட அனைத்து தூதரகங்களிலும் வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு விசாக்களைத் தவிர, சுற்றுலா உள்ளிட்ட இதர அனைத்து வகை விசா சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.