வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்; ஐ.நா. தலையிட வேண்டும் - கொலம்பியா அதிபர் அழைப்பு
தாக்குதல் காரணமாக வெனிசுலா ராணுவ தளத்திற்கு அருகில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.;
கராகஸ்,
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் சுமார் 7 இடங்களில் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. தாக்குதல் காரணமாக வெனிசுலா ராணுவ தளத்திற்கு அருகில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்துவதாகவும், இந்த விவகாரத்தில் ஐ.நா. உடனடியாக தலையிட வேண்டும் என்றும் கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், காந்த பல மாதங்களாக, வெனிசுலாவில் உள்ள இலக்குகள் மீது விரைவில் தாக்குதல் நடத்த உத்தரவிடப்போவதாக மிரட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.