வெனிசுலா மீது தாக்குதல்: டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்

வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் திடீரென குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி அதிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2026-01-04 01:58 IST

கோப்புப்படம்

ஜெருசலேம்,

போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக கூறி வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் திடீரென குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபரை கைது செய்தது. இதனைத்தொடர்ந்து அந்த நாட்டை கைப்பற்றி விட்டதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “வெனிசுலா மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதலை நடத்தியது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வெனிசுலா மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக, டிரம்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “சுதந்திரம் மற்றும் நீதிக்காக உங்கள் துணிச்சலான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமைக்கு வாழ்த்துக்கள், ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். உங்கள் தீர்க்கமான மன உறுதியையும், உங்கள் துணிச்சலான வீரர்களின் அற்புதமான செயலையும் நான் வணங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்