கேளிக்கை விடுதி அருகே நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார்; 30 பேர் காயம்

இந்த சம்பவத்தில் 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.;

Update:2025-07-19 18:34 IST

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சாண்டா மொனிகா புயூவெர்ட் பகுதியில் இரவு நேர கேளிக்கை விடுதி உள்ளது. இந்த கேளிக்கை விடுதிக்கு வெளியே இன்று அதிகாலை (அந்நாட்டு நேரப்படி) 30க்கும் மேற்பட்டோர் நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது, கேளிக்கை விடுதி அமைந்துள்ள சாலையில் வேகமாக வந்த கார் அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 30 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்