நாடாளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்

திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிவருகின்றனர்.

Update: 2024-04-19 03:33 GMT

சென்னை,

அடுத்த 5 ஆண்டுகள் நம்மை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும்18-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையில் இருந்தே மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிவருகின்றனர். அந்த வகையில்,

நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை சென்னை திருவான்மியூரில் உள்ள வாகுச்சாவடியில் முதல் நபராக செலுத்தினார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் பிரபு குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது,

வாக்கு என்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி வாக்களியுங்கள். இன்று மாலை 6 மணிவரை நேரம் உள்ளது. அனைவரும் வந்து வாக்களியுங்கள். இவ்வாறு பேசினார்.

நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் வந்து மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். அதனைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில்,

வாக்கு நமது உரிமை, வாக்களிப்பது நமது கடமை. ஆபிரகாம் லிங்கன் கூறியதுபோல் புல்லட்டை விட வலிமை வாய்ந்தது வாக்கு. வாக்கு செலுத்தினால்தான் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க முடியும். இவ்வாறு கூறினார்.

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கார்த்திக் தனித்தனியாக வந்து தங்களது வாக்கினை செலுத்தினார்.

இசையமைப்பாளர் இளையராஜா சென்னை தியாகராய நகரில் உள்ள பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் யோகி பாபு வாக்களித்தார்.

நடிகர் தனுஷ் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

நடிகை திரிஷா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

நடிகர் விஜய் சேதுபதி சென்னையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

நடிகர் சசிகுமார் மதுரை புது தாமரைப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

கவிஞர் வைரமுத்து சென்னை சூளைமேட்டில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் .

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவி பிரீத்தா உடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தார் இயக்குனர் ஹரி.

நடிகர் விக்ரம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

நடிகர் சித்தார்த் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடிகர் விஜய் தனது வாக்கினை செலுத்தினார். 

நடிகர் சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் வாக்களித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்