2வது டி20: இலங்கை - வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்
முதலாவது ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.;
Image Courtesy: @OfficialSLC
தம்புல்லா,
வங்காளதேச கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இலங்கை-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் முதலாவது ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி தம்புல்லாவில் இன்று நடக்கிறது. லிட்டான் தாஸ் தலைமையிலான வங்காளதேச அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை இழக்காமல் இருக்க எல்லா வகையிலும் போராடும்.
அதேநேரத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்ற இலங்கை அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து தொடரை கைப்பற்ற தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்பை எதிர்பார்க்கலாம். இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.