வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2வது டெஸ்ட்: நிதிஷ்குமார் ரெட்டி பந்துவீசாதது ஏன்..? - சுப்மன் கில் விளக்கம்
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியது.;
Image Courtesy: @BCCI
புதுடெல்லி,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இதில் 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்த தொடரில் 2வது போட்டியில் இந்திய ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி 2 இன்னிங்சிலும் பந்துவீசவில்லை. நிதிஷ் குமார் ரெட்டிக்கு பந்துவீச வாய்ப்பு அளிக்காதது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.
இந்நிலையில் நிதிஷ்குமார் ரெட்டிக்கு இந்த போட்டியில் பந்துவீச வாய்ப்பு வழங்காதது ஏன்? என்பது குறித்த ஒரு தெளிவான விளக்கத்தை கேப்டன் கில் போட்டிக்கு பின்னர் அளித்திருந்தார். அந்த வகையில் அவர் கூறியதாவது, இந்த போட்டியில் நிதிஷ்குமார் ரெட்டிக்கு பந்துவீச வாய்ப்பு வழங்காதது இயல்பான ஒன்றுதான். அவரை தேவையான நேரத்தில் பயன்படுத்துவோம். இந்த போட்டியில் அவருக்கு பந்துவீச வேண்டிய தேவை ஏற்படவில்லை.
வெளிநாட்டு போட்டிகளில் மட்டுமே நாங்கள் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களை பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. ஏனெனில் அது அவர்களுக்கு அழுத்தத்தை தரும். இதுபோன்ற சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் அவர்களின் திறனை வளர்த்தெடுத்து முக்கியமான பெரிய போட்டிகளில் விளையாட வைக்க வேண்டும். இந்த போட்டியை பொருத்தவரை அவருக்கு பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இனிவரும் தொடர்களில் நிச்சயம் அவர் அதிகமான ஓவர்களை வீசுவார். இவ்வாறு அவர் கூறினார்.