3வது ஒருநாள் போட்டி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்
சிட்னியில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது;
சிட்னி ,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. சிட்னியில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. நாளை காலை 9 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
இந்த போட்டியில் வென்று ஆறுதல் வெற்றி பெற இந்தியா தீவிரம் காட்டும். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக வெல்ல ஆஸ்திரேலியா முனைப்பு காட்டும்.