மழையால் ரத்தான 3வது டி20 போட்டி: தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.;
Image Courtesy: @englandcricket / X (Twitter) / File Image
ஆக்லாந்து,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் முதல் இரு ஆட்டங்களின் முடிவில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து 3.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்திருந்த போது, பலத்த மழை கொட்டியதால் அத்துடன் ஆட்டம் கைவிடப்பட்டது.
இதனால் இங்கிலாந்து அணி தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டமும் மழையால் பாதியில் ரத்தானது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது.