3-வது டெஸ்ட்:பும்ரா அசத்தல் பந்துவீச்சு.. 2-வது நாளில் தடுமாறும் இங்கிலாந்து

ஜோ ரூட் 104 ரன்களில் ஆட்டமிழந்தார்.;

Update:2025-07-11 16:08 IST

லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 251 ரன்கள் அடித்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த சூழலில் இன்று 2-வது நாள் ஆட்டம் ஆரம்பமானது.

இன்றைய நாளின் தொடக்க ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ராவின் முதல் பந்திலேயே பவுண்டரி அடுத்த ஜோ ரூட் தனது 37-வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். ஆனால் இங்கிலாந்து அணிக்கு இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. பும்ரா தனது 2-வது ஓவரிலேயே இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்சை (44 ரன்கள்) கிளீன் போல்டாக்கினார்.

அதோடு நிறுத்தாத பும்ரா தனது அடுத்த ஓவரில் ஜோ ரூட் (104) மற்றும் கிறிஸ் வோக்சின் (0) விக்கெட்டையும் அடுத்தடுத்து கைப்பற்றி அசத்தினார். தற்போது வரை இங்கிலாந்து அணி 88 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை 271 ரன்களுடன் தடுமாறி வருகிறது. ஜேமி சுமித் மற்றும் பிரைடன் கார்ஸ் களத்தில் உள்ளனர். அசத்தலாக பந்துவீசிய பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்