4வது டி20: ஆஸ்திரேலிய அணிக்கு 206 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ரூதர்போட்டு 31 ரன்கள் எடுத்தார்.;
Image Courtesy: @windiescricket
கயானா,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸின் தொடக்க வீரர்களாக பிரண்டன் கிங் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் களம் புகுந்தனர். இதில் பிரண்டன் கிங் 18 ரன், ஷாய் ஹோப் 10 ரன் எடுத்து அவுட் ஆகினர்.
அடுத்து களம் புகுந்த ரூதர்போர்டு 31 ரன், ரோவ்மன் பவல் 28 ரன், ஹெட்மையர் 16 ரன், ரொமாரியோ ஷெப்பர்டு 28 ரன், மேத்யூ போர்டு 15 ரன் எடூத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் குவித்தது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ரூதர்போட்டு 31 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 206 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆட உள்ளது.